‘பிரகாஷ் இப்ப வரைக்கும் என் பசங்கள’.. மனம் திறந்த நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி நடிகை லலிதா குமாரி..

By Archana

Published on:

சினிமாவில் சக கலைஞர்களை திருமணம் செய்து கொள்வதும், அவர்களுடன் காலம் முழுக்க ஒன்றாக வாழ்வதும், சில காலங்களில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிவதும் என்பது சாதாரண ஒன்று. அப்படி திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் நடிகர் பிரகாஷ் ராஜ்-லலிதா குமாரி தம்பதி. மனதில் உறுதி வேண்டும், மாப்பிள்ளை, புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லலிதா குமாரி. திரைத்துறையில் ஒன்றாக பணியாற்றிய பிரகாஷ் ராஜூம், லலிதா குமாரியும் காதலித்து கடந்த 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

Prakash raj first wife is sister to the Disco Shanthi

இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 16 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த தம்பதி, பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விவாகரத்து செய்தனர். அதன்பின் பிரகாஷ் ராஜ், போனி வர்மா என்ற நடன இயக்குநரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பொதுவாகவே விவாகரத்தானபிறகு முன்னாள் கணவரை பற்றி குறை சொல்லி, பிரச்சனை செய்யும் பெண்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்கள் என்றால், மாத்தி மாத்தி தரக்குறைவாக பேசி, பேட்டி கொடுப்பது தான் வழக்கம்.

   
article 2021925717213862498000

அப்படிப்பட்டவர்களுக்கு மத்தயில் நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னாள் மனைவி லலிதா குமாரி, இன்று வரையிலும் பிரகாஷ் ராஜை பற்றி தரக்குறைவாகவோ, மரியாதை இன்றியோ பேசியதே இல்லை. தன்னுடன் 16 வருடங்கள் ஒற்றுமையாக வாழ்ந்த அவர், பிரிந்த பிறகும் கூட, தன் பிள்ளைகளுக்கு தேவையானவற்றை முழுமையாக பார்த்துக் கொள்வதாக லலிதா குமாரி கூறியிருக்கிறார். பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்கான பொருளாதார தேவை என்றாலும், எதுவானாலும் ஒரு போன் அல்லது மெசேஜ் செய்தால் உடனே வந்து அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து விடுவதாகவும், தன்னை விட தனது பிள்ளைகளை அவர் நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் நெகிழ்ச்சியுடன் லலிதா குமாரி பகிர்ந்துள்ளார்.

article 2023512915405856458000
author avatar
Archana