சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நடிகை.. செம்ம குஷியில் ரசிகர்கள்..

By Mahalakshmi

Published on:

அன்றைய காலத்தில் சினிமா வாய்ப்புகளை தேடி அலையும் நிலைமை இருந்தது. ஆனால் தற்போது திறமை இருந்தால் போதும் நம்மளை தேடி வாய்ப்புகள் வரும் அளவிற்கு வளர்ந்து விட்டது. அதுபோலவே சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு நடிக்கும் வாய்ப்பு சுலபமாகிவிடுது.அந்த வகையில்,  நடிகை பிரியா பவானி சங்கர் விஜய் டிவியில்  ஒளிபரப்பான  கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் அறிமுகமானார்.

   
அதன் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததால் தற்போது ஹீரோயினாக இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். அதுபோலவே சன் டிவி சீரியல் நடிக்கும் நடிகைக்கும் ஒரு அதிஷ்டம் அடித்திருக்கிறது. விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வாய்ப்பு கிடைத்தால் பாதியிலேயே பிரியா பவானி ஷங்கர்
அதன்பின் அந்த கதாபாத்திரத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை சைத்ரா ரெட்டி. இதன் மூலம் கிடைத்த வரவேற்பினால் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி என்ற சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். இந்த வாய்ப்புகள் மூலம் சன் டிவியில் கயல் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வென்று டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து விட்டார்.
அப்படிப்பட்ட இவருக்கு வெள்ளி திரையில் கிடைத்த முதல் வாய்ப்பு அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து “விஷமக்காரன்” என்கிற படத்தில் கதாநாயகியாக  நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருக்கு மறுபடியும் வெள்ளித் திரையில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தொடர்ந்து தேடி வந்து கொண்டே இருக்கிறது.
இதனால் அதிலும் இவருடைய கவனத்தை செலுத்தி இனி கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்க இருப்பதாக சைத்ரா ரெட்டி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழிச்சியில் கூறி இருக்கிறார். இவருக்கு திருமணமாகி இருந்தாலும் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தேடி வருவதால் அதையும் விடாமல் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகின. இந்த ஒரு விஷயம் இவருடைய ரசிகர்கள் மத்தியில்அதிக வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
author avatar
Mahalakshmi