இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் PM உஜ்வாலா யோஜனா திட்டம். நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் இலவச கேஸ் இணைப்பு வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் ஏழை பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர மானியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே 40 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தில் 25 லட்சம் புதிய கேஸ் இணைப்புகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10% (2.50 லட்சம்) இணைப்புகள் நகரமயமாக்கல் அதிகமாக இருக்கும் தமிழகத்திற்கு ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
