அவனை கையில் விலங்கு போட்டு கூட்டிட்டு வரணும்.. விஜய் நாட்டுக்கே கேடு, சும்மா விடக்கூடாது… நக்கீரன் கோபால் பரபரப்பு பேச்சு…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

கடந்த வாரம் சனிக்கிழமை தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இருந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்காதது, விஜய் கட்சியின் அலட்சியப் போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த எதிர்பாராத விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விஜய்க்கு ஒரு தரப்பு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு எதிராகவும் மாறி உள்ளது.

குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தன்னுடைய கூட்டணியை அதிமுக மற்றும் பாஜகவுடன் அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் இதற்கு தூண்டில் போடும் விதமாக இப்போது டெல்லி தலைமை விஜய் இடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளம் மூலமாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

   

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் விஜய்க்கு எதிராக பேசி வருகிறார்கள். இந்நிலையில் பிரபல ஸ்டார் பத்திரிக்கையாளராக பார்க்கப்படும் நக்கீரன் கோபால் விஜயை ஒருமையில் பேசி பிரபல youtube சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், விஜய் கையில் விலங்கு போட்டு கூட்டிட்டு போகணும், அவன் 41 கொலை செய்திருக்கான். அதேபோல நான் திமுக காரன் இல்லை.

   

ஆனால் முப்பெரும் விழா பற்றி விஜய் அப்படி பேசியது சரியல்ல. 1.5 லட்சம் சேர் போட்டு அதில் பிஸ்கட், ஸ்னாக்ஸ், தண்ணீர் பாட்டில் எல்லாம் வைத்து அனைவரையும் மரியாதையோடு நடத்தினார்கள். அதை விஜயின் 30 பேரை வைத்து விழாவா என்று கிண்டல் செய்வது போல பேசியது கண்டிக்கத்தக்கது. இதை பேச அவனுக்கு என்ன திமிரு இருக்கணும். விஜய் கூட்டத்திற்கு வந்ததுமே காவல்துறைக்கு தன்னுடைய நன்றியை கூறினான். இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவே அவனைக் காப்பாற்றிக் கொண்டு வந்ததே அந்த போலீஸ் தான் என்பதை நீயே சொல்ற மூதேவி, அப்புறம் எதுக்கு இந்த சம்பவத்துக்கு போலீசும் கூட உடனடியா இருக்கலாம் என்று சொல்ற.

 

அதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவனை எல்லாம் கையில் விலங்கு போட்டு கூட்டிட்டு வரணும். 41 கொலை பண்ணி இருக்கான். விஜய் கண்முன்பை சிலரை அந்த கூட்டத்தில் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அது அவனுக்காக வந்த கூட்டம். ஆனால் அவனுக்கு எந்த பதட்டமும் கிடையாது. என்ன நடக்கிறது என்று கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. கல்நெஞ்சனை விட கொடூரன் அவன் பன்னியது. விஜய் இந்த தமிழ்நாட்டிற்கே விஷம் போன்றவர் என்று நக்கீரன் கோபால் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.