இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மாணவர்களுக்கு ஏராளமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு இது குறித்த சரியான விழிப்புணர்வு பெரிதாக இல்லை. சமூக பொருளாதார சூழலால் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய குடும்பத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி விழிப்புணர்வோடு இருப்பது கட்டாயம். அதன்படி மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா என்ற கல்வி உதவித்தொகை திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
பிரதமர் உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை பொருத்தவரை வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மத்திய அரசு வழங்கி வருகின்றது. 18 முதல் 25 வயது உடைய மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். 10 ஆம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறையில் பயின்றவர்கள் ஊக்கத்தொகைக்கு தகுதியற்றவர்கள்.
12 ஆம் வகுப்பு முடித்து இளங்கலை, முதுகலை மற்றும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் உதவித்தொகை கிடைக்கும். இடை நிற்கும் மாணவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தால் நீக்கம் செய்யப்படும் மாணவர்களுக்கு உடனடியாக உதவி தொகை நிறுத்தப்படும். இளங்கலை படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 12000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
முதுகலை பட்டப்படிப்பு தொடர்பவர்களுக்கு தலா 20000 ரூபாய் ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். பொறியியல் போன்ற நான்கு ஆண்டுகள் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு தலா 12000 மற்றும் கடைசி ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். மாணவர் அல்லது மாணவியரின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்.
இந்த திட்டத்தில் பயனுடைய வருமானச் சான்றிதழ், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாள் ஆகும். இதற்கு தகுதி உள்ள மாணவ மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…