விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இன்றுடன் 64 நாட்களையும் நிறைவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளிய அனுப்பப்பட்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவர் தான் பிரதீப் .இவருக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

இருப்பினும் தற்பொழுது இவர் அதனை ஏற்றுக் கொண்டு தனது அடுத்த கட்ட வேலையை நோக்கி நகர்ந்து விட்டார். டைட்டில் வென்றிருந்தால் கூட இவ்வளவு பிரபலமாக இருக்க மாட்டார். ஆனால் தற்பொழுது இவருக்கு என இணையதள பக்கத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து விவகாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைத்து போட்டியாளர்களும் ஒன்று சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தனர்.

இது குறித்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஐஷு, அக்ஷயா , பிராவோ என பலரும் பேட்டி கொடுத்து உள்ளனர். பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப் இருந்த பொழுது அவரிடம் அதிகம் சண்டையிட்ட போட்டியாளர்களில் ஒருவர் தான் ஜோவிகா. இந்த வாரம் அவர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறுவார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அருகில் நாய் ஒன்று படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு’ jojo’ என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேறுவதை பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு மறைமுகமாக தெரிவித்துள்ளதாக நெட்டிசன்கள் தற்பொழுது கூறி வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
Jojo ???? pic.twitter.com/Zkc47hr6sV
— Pradeep Antony (@TheDhaadiBoy) December 1, 2023
