பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது 63 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒரு போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்த வார நாமினேஷனுக்கு சரவணன் விக்ரம், விசித்ரா, பூர்ணிமா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ், ஜோவிகா, மணி என 9 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் சரவண விக்ரம் தான் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியற்றப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் கடைசி நேரத்தில் வனிதாவின் மகளான ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெளியான பிக் பாஸ் ப்ரோமோவில் கார்டை பார்த்ததும் கமலஹாசன் ஷாக் ரியாக்சனை கொடுத்தார். அதேபோல வனிதாவும் நேற்று ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டு இருந்தாலும் வீட்டுக்கு வரவில்லை என்ற தகவலை பிக் பாஸ் ரிவியூ உளறி இருந்தார் .

இதனால் ஜோவிகா சீக்ரெட் ரூமில் இருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது என்றே கூறலாம். முதல் 3 சீசன்களில் போட்டியாளர்கள் பிக் பாஸ் சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த 4, 5, 6 சீசன்களில் இவ்வாறு தங்க வைக்கப்படவில்லை .இந்நிலையில் இந்த 7வது சீசனில் ஜோவிகா பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்பட்டுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதோ அந்த ப்ரோமோ…
