Categories: சினிமா

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பிரதீப், டிவிட்டரில் போட்ட முதல் போஸ்ட் இதுதான் – இவரு இப்படித்தான் இருப்பாரோ?

Spread the love

விஜய் டிவியில் கடந்த 5 வாரங்களாக, பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. சீசன் துவங்கிய நாளில் இருந்தே, வீட்டுக்குள் பிரச்னைகளும், பஞ்சாயத்துகளும் குறையவே இல்லை. தினமும் ஏதாவது ஒரு கண்டென்ட் என்ற பெயரில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதும், கடுமையான வார்த்தைகளில் திட்டிக்கொள்வதும் தொடர்ந்து நடக்கிறது. இதில் சிலர் விதிமுறை மீறல் மட்டுமின்றி, வரன்முறை தாண்டியும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்துக்கொள்வது பார்வையாளர்களை திகைப்படைய வைக்கிறது.

அருவி படத்தில் உதவி இயக்குநர் கேரக்டரில் நடித்திருப்பார் பிரதீப். அவர், இந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். பல விஷயங்களில் உண்மையாக அவர் நடந்துக் கொண்டதாக, பார்வையாளர்கள் மத்தியில் அவர் பாராட்டப்பட்டார். மற்ற போட்டியாளர்கள் கேமராக்கள் முன் நடித்த நிலையில், பிரதீப் பல விஷயங்களில் தன் மன உணர்வுகளை அப்படியே வௌிப்படுத்தி, கடந்த வாரத்தில் நல்ல ரேட்டிங்கில் இருந்தார்.

இந்நிலையில், நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமல்ஹாசன் பங்கேற்று போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கிருந்த பெண் போட்டியாளர்கள் பலரும், பிரதீப் மீது குற்றச்சாட்டுக்களை கூறினர். குறிப்பாக, அவரால் இந்த வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றனர். அதுவும், பாத்ரூமை திறந்துவைத்துக்கொண்டு பயன்படுத்துகிறார் எனவும் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு காட்டி, பிக்பாஸ் வீட்டை விட்டு கமல் அவரை வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த பிரதீப், தனது லைக் சிம்பல்ஸ், கோழி இறகு, பின்னூசி, லாலிபப் மிட்டாய் குச்சி, ஸ்டார் போன்றவற்றை புகைப்படம் எடுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். பிபி 7 டிராபிஸ் என்ற கேப்சனுடன் பதிவிட்டுள்ளார்.

admin

Recent Posts

ரொம்ப ஆட்டம் போட்ட இப்படித்தான் ஆகும்…! போதையில் கார் மேல் ஏறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த ஷாக்… திட்டி தீர்க்கும் இணையவாசிகள்..!!

மதுபோதையில் மிதமிஞ்சிய ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர், தார் (Thar) காரின் மேற்கூரை மீது அமர்ந்திருக்க, ஓட்டுநர் காரைச் சாமர்த்தியமாகக்…

10 seconds ago

பதைபதைக்கும் வீடியோ..! மரத்தில் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு… உடலில் மிளகாய்ப் பொடி தூவி ரத்தம் சொட்டச் சொட்ட கொடூரம்.. பழைய பகையை தீர்க்க இப்படியொரு கொடூரமா??

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள குருதாஸ்பூர் மத்தியா கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான மனிதநேயமற்ற சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும்…

4 minutes ago

“அம்மா துடிதுடிக்க செத்ததை பார்த்தேன்” குழந்தையின் கண்முன்னே… தாயை கொன்று தூக்கிலிட்ட கொடூரம்… வரதட்சணைக்காக இப்படியா..? சிறுவனின் பகீர் வாக்குமூலம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தனது பிஞ்சு குழந்தையின் கண்ணெதிரேயே தாய் ஒருவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கொடூரச்…

7 minutes ago

“சீனாவுக்கு நான் தரும் கிப்ட்” அதிபர் ஷி ஜின்பிங் என்னைக் கட்டிப்பிடித்து வரவேற்பார்… ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் போட்ட ‘மாஸ்’ பதிவு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…

20 minutes ago

“டேய் திரும்பிப் பாக்காம ஓடுங்கடா” மனிதர்களே தேவையில்லை… தானாகவே காட்டுப்பன்றிகளை விரட்டும் ரோபோ… வைரலாகும் வீடியோ இதோ..!!

போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…

27 minutes ago

BREAKING: எனக்கும், அன்புமணிக்கு எந்த தொடர்பும் இல்லை… பாமக ராதாமஸ் அதிரடி அறிவிப்பு..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

32 minutes ago