
CINEMA
“பத்ரமா போய் சேந்த்ரனும் #ஆண்டவா”.. Flight-ல போகும்போது ட்வீட் போட்டு கமலை வம்புக்கு இழுக்கும் பிரதீப்…
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்தான் பிரதீப். அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட இவர், திடீரென பிக் பாஸ் வீட்டை விட்டு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அவ பெயருடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் .ஆனால் டைட்டில் ஜெயித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் இவர் தற்பொழுது பிரபலமாக உள்ளார். இவருக்கென தற்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
இந்நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் இனிமேல் பிக் பாஸ் வீட்டிற்கு தான் வரவில்லை என்பதை தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் உறுதி செய்துள்ளார். மேலும் அவர் அவ்வப்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் தான் கோவாவிற்கு செல்வதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது கோவாவிற்கு பிளைட்டில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு ‘ ஒரு வேளை பிளைட் வெதர் நாள ஆக்சிடன்ட் ஆனா கூட என் மேல பழி வருமோ? பத்திரமா கோவா போய் சேர்ந்துடணும் ஆண்டவா’ என்று மறைமுகமாக கமலஹாசனை சுட்டிக்காட்டி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .இதோ அந்த பதிவு…
Hmmm ????#PlaneSafety #OruVelaFlightWeatherNaalaAccidentAnaKoodaEnMelaPazhiVarumo #BathramaGoaPoiSendhuranumAndava pic.twitter.com/Lumv62gLgt
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 20, 2023