Connect with us

Tamizhanmedia.net

“பணத்த திருடிட்டு, சூர்யா மேல கேஸ் போட்டுடார்”.. ஒரே பேட்டியில் அமீரின் சொலியை முடித்த KE.ஞானவேல்ராஜா..

CINEMA

“பணத்த திருடிட்டு, சூர்யா மேல கேஸ் போட்டுடார்”.. ஒரே பேட்டியில் அமீரின் சொலியை முடித்த KE.ஞானவேல்ராஜா..

சமீபத்தில், மாயமான் படம் குறித்த பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் அமீர், பருத்தி வீரன் தயாரிப்பு சம்பந்தமாக 17 ஆண்டுகளாக, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருவதாகவும், அதற்கு நான் மட்டும் ஆஜராவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து இந்த பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. பருத்தி வீரன் படத்தை தயாரித்த ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீர் குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் கடுமையாக பேசி இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.

Aamir

   

பருத்தி வீரன் படம். 2.75 கோடி ரூபாய் செலவில் துவங்கப்பட்ட படம்தான். ஒரு தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட எல்லாரையும் நம்பித்தான் ஆக வேண்டும். நான் அப்படித்தான் நம்பினேன். இயக்குநர்களிடம் நான் கதை கேட்பதில்லை. அதற்கு காரணம், இயக்குர்கள் மீதுள்ள நம்பிக்கை தான். ஆனால், கடைசியில் சூர்யா மீது வழக்கு தொடுத்துவிட்டார் அமீர். தயாரிப்பாளர் கவுன்சிலில், படம் தயாரிப்பு செலவு குறித்து கணக்கு அமீரிடம் கேட்டனர். அப்போது, பருத்திவீரன் பிளாஸ்பேக்கில் 250 பன்றிகளை கணக்கு காட்டுகிறார். படத்தில் 100 பன்றிகள் தான் தெரிந்தது என்றும், 70 பன்றிகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகவும் கூறியிருக்கிறார்.

பிளவர், பூ, புஷ்பம் என்று சினிமா தயாரிப்பில் கணக்கு காட்டுவார்கள். அப்படி ஏமாத்தும் கணக்கு காட்டியவர் அமீர். உழைத்து சாப்பிடாமல், படத்துக்கு செலவழிக்காமல் அந்த பணத்தை திருடிவிட்டார். அவர் நேர்மையாக பணம் செலவழித்து படம் எடுக்கவில்லை. நான் தயாரிப்பாளராக, சூர்யா நடிகராக எங்கள் வாழ்க்கை பயணத்தை கவனித்தோம். அமீரை நாங்கள் மறந்து போய்விட்டோம். ஆனால், இப்போது அனுபவம் மிக்க ஒரு தயாரிப்பாளரான என்னிடம் அமீர் வந்தால், அவரை நான் டீல் பண்ற விதமே வேற மாதிரி இருக்கும், என்று பேசி இருக்கிறார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

ALSO READ  பருத்திவீரன் பட விவகாரம்.. 17 வருடமாக நடக்கும் Case.. அறிமுகம் செய்தவரை கண்டுகொள்ளாமல் நன்றி மறந்த கார்த்தி..

More in CINEMA

To Top