
CINEMA
அந்த 3 பெண்கள் காஷ்மீர் வரலைன்னா, நான் ஷூட்டிங்கே வரமாட்டேன்.. ஒற்றைக்காலில் நின்ன MGR.. பிளாஷ்பாகை பகிர்ந்த பிரபல நடிகை ..
இயக்குநர் மகேந்திரன் இயக்கிய ஜானி படத்தில், பாடகியாக ஸ்ரீதேவி இருப்பார். அவரது உதவியாளராக நடிகை பிரேமி உடனிருப்பார். இப்படி பல படங்களில் நடிகை பிரேமி நடித்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அவர் பரிச்சயமான முகமாக இருந்தாலும், பெயர் சொல்லும்படியாக தனியாக சில படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவரது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் நடிகை பிரேமி கூறியதாவது, எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தில், நான் நர்ஸ் கேரக்டரில் நடித்துவிட்டேன். ஆனால் அதற்கு பிறகு அந்த படத்தின் ஷூட்டிங்காக காஷ்மீர் செல்கிற தகவல் கிடைத்தது. ஆனால், காஷ்மீரில் நடக்கும் ஷூட்டிங்கில் நான் நடிக்க வேண்டியது இல்லை. என்றாலும், காஷ்மீரை இந்த வாய்ப்பை விட்டால் பார்க்க முடியாது.
அதனால் நானும் என்னுடன் 2 பெண்களும் என மூன்று பேரும் எம்ஜிஆர் ஆபீஸ்க்கு நேரில் சென்று எம்ஜிஆரை சந்தித்து, நாங்கள் காஷ்மீர் பார்க்க வேண்டும் என்றோம். நாங்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறோம் என்பதால், கம்பெனியில் கேட்டோம், ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர் என்றோம். உடனே அந்த கம்பெனிக்கு போன் செய்த எம்ஜிஆர், இந்த 3 பெண்களுக்கும் காஷ்மீர் வருவதற்கு டிக்கெட் போடுங்க, நான் அங்கு வரும்போது இவர்கள் 3 பேரும் காஷ்மீரில் இருக்க வேண்டும், இல்லை என்றால், நான் திரும்பி வந்துவிடுவேன் என மிரட்டும் தொனியில் சொல்ல, உடனே கம்பெனியில் ஓகே சொல்லி விட்டனர்.
அதற்கு பிறகு, காஷ்மீரில் மிலிட்டரி பாதுகாப்புடன், தனியாக ஒரு பஸ்சை ஏற்பாடு செய்து காஷ்மீர் முழுவதும் நாங்கள் சுற்றிப்பார்க்க நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமின்றி டெல்லி, ஆக்ரா போன்ற இடங்களையும் காண அதற்கும் தனியாக ஏற்பாடு செய்தார். இப்படி ஒரு சிறந்த மனிதர் அவரை தவிர யாரும் இருக்க முடியாது. உரிமைக்குரல் படப்பிடிப்பில் நான் நடித்த போது, இடைப்பட்ட நேரங்களில் புத்தகம் படித்துக்கொண்டு இருப்பேன். அப்போது என்னிடம், நல்ல கதையாக எழுது, உன் கதையில் நான் நடிக்கிறேன், என்று வேடிக்கையாக சொல்வார் எம்ஜிஆர் என கூறியிருக்கிறார் நடிகை பிரேமி.