பிறந்த நாளில் விக்கிக்கு Dates கொடுத்து Date அ confirm பண்ண பிரதீப்… அப்போ தரமான சம்பவம் இனிமேல் தான் இருக்கு…

By Begam on புரட்டாதி 19, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பு இவர் சில குறும்படங்கள் இயக்கியுள்ளார்.கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் தனது முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அசத்தினார். அதன் பிறகு திடீரென ஹீரோவாக நடிக்க போவதாக அவர் அறிவித்திருந்தார். இதற்கு தேவையற்ற வேலை என்று பலரும் கூறி வந்தனர்.

   

ஆனால் ஏஜிஎஸ் தயாரிப்பில் அவர் இயக்கிய நடித்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கோலிவுட்டில் எமர்ஜிங் ஹீரோவாகவே பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார் என்று கூறலாம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சில திரைப்படங்கள் இயக்குவதாக பிரதீப் ரங்கநாதன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.வெறும் ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து அமோக வெற்றி பெற்றது.

   

 

ஏராளமான புதுமுக கதாபாத்திரங்கள் லவ் டுடே திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த நிலையில் லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ள நிலையில் இனிமேல் ஹீரோவாக தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அப்படியே இயக்கினாலும் தன்னுடைய படங்களை தானே இயக்கி நடிக்க முடிவில் பிரதீப் ரங்கநாதன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய  இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு பிரதீப் குமார் dates கிப்ட்டாக கொடுத்துள்ளார். இதன்மூலம் அவருக்கு date கொடுத்துள்ளாரா? இல்லை அடுத்த அவரது திரைப்படத்தின் பெயர் Dates ஆ என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் இருவரின் கூட்டணியை மட்டும் மறைமுகமாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதோ அந்த வீடியோ…