தமிழில் 2008இல் வெளியான ‘பூ’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி மேனன். 1988ல் கேரளாவில் பிறந்த இவர் பிரபல மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். இதன் பின்னர் 2006 இல் மலையாளத்தில் வெளியான ‘அவுட் ஆப் சிலபஸ்’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமா சினிமா துறையில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறப்பாக நடித்த இவருக்கு ஃபிலிம் ஃபார் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவர் தமிழில் ‘பூ’ படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதை தொடர்ந்து அவர் சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மலையாளத்தில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்பொழுது இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை மற்றும் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் அவ்வப்பொழுது சமூகப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார்.

அதேபோல திரைத்துறையில் நடக்கும் பிரச்சினைகளையும் அச்சம் இல்லாமல் வெளிப்படுத்தி வருகிறார். இவ்வாறு திரையுலகில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பார்வதி சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது ஹேர் ஸ்டைலை மாற்றி நியூ லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
