சேறை உடம்புல பூசிக்கிட்டு இது என்ன புதுக்கோலம்…? லியோ பட நடிகர் வெளியிட்ட புகைப்படம்…

By Begam on புரட்டாதி 19, 2023

Spread the love

மலையாள நடிகர் பாபு ஆண்டனி தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு வெளியான ‘அஞ்சலி’ படத்தில் பாபு ஆண்டனி வில்லனாக நடித்திருந்தார். மேலும் லாடம், விண்ணைத்தாண்டி வருவாயா, காஞ்சனா, ரவுத்திரம், ஆதிபகவன், காவியத் தலைவன், அடங்கமறு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது.

   

 

இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் தளபதியின் லியோ திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் இணையத்தில் சமீபத்தில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து தளபதி விஜய் நடிக்கும் இத்திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதைத்தொடர்ந்து  அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தற்பொழுது சா கடலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்பொழுது  வைரலாகி வருகிறது.