Categories: சினிமா

முதல் பட ஷூட்டிங்குக்கே லேட்டா வர்றீயா?.. கோபப்பட்ட சிவாஜி… அப்படி எங்க போயிட்டு வந்தார் பிரபு?

Spread the love

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கணேசனாக நாடக மேடைகளில் தனது நடிப்பாற்றலால் கலக்கிக் கொண்டிருந்த போது அவர் நடித்த பல நாடகங்கள் தமிழகத்தின் பல மூளைகளில் அரங்கேறி கணேசன் (அப்போது சிவாஜி என்ற பட்டம் கொடுக்கப்படவில்லை) புகழைப் பரப்பின.

#image_title

சிறுவனாக நாடக உலகில் நுழைந்த கணேசன் வாலிப வயதை எட்டியதும் பெண் வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த நாடகங்களில் ஒன்றுதான் நூர்ஜஹான். அந்த நாடகத்தில் கதைநாயகியான நூர்ஜஹான் கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டு நடித்தவர் கணேசன்தான். அதன் மூலம்தான் அவருக்கு பராசக்தி பட வாய்ப்புக் கிடைத்து அவர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் இரு துருவங்களில் ஒன்றாக இருந்தார்.

சிவாஜி கணேசனுக்கு அவர் காலத்தில் கடுமையான போட்டியாக இருந்தவர் எம் ஜி ஆர். எம் ஜி ஆர் 1977 ஆம் ஆண்டு அரசியலுக்கு சென்று முதலமைச்சர் ஆனதும் சினிமாவில் இருந்து விலகினார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் சிவாஜி கணேசன் ஹீரோவாக நடிப்பதும் குறைந்தது. அந்த காலத்தில் ரஜினி கமல் வந்துவிட்டதால் சிவாஜி தன் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.

அப்போதுதான் தன்னுடைய இளைய மகன் பிரபுவைக் கதாநாயகனாக்கும் முடிவை எடுத்தார். சங்கிலி என்ற படத்தில் பிரபுவை அறிமுகப்படுத்தி, அவருக்கு துணையாக தானும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்குக்கு  சிவாஜி சரியான நேரத்தில் சென்றுவிட, பிரபுவோ தாமதமாக வந்துள்ளார்.

காலதாமதம் என்பது சிவாஜிக்கு பிடிக்காது எனபதால் அவரிடம் “ஏன் லேட்டாக வந்தாய்” எனக் கேட்டுள்ளார். அதற்கு பிரபு “அப்பா எனக்கு இன்னைக்கு முதல் நாள் ஷூட். அதுதான் ராமாபுரம் தோட்டத்துக்கு சென்று எம் ஜி ஆர் பெரியப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்தேன்” எனக் கூறினாராம். இதைக் கேட்டு சிவாஜி நெகிழ்ந்து போனாராம்.

vinoth

Recent Posts

மகளிருக்கு ஜாக்பாட்…. உரிமைத் தொகையை உயர்த்தும் CM விஜய்?…. அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!

மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைப் பெற்று, மகளிருக்கான உரிமைத் தொகையை முதல்வர் விஜய் உயர்த்தி வழங்குவார் என…

1 minute ago

“தவெகவுடன் அதிமுக  கூட்டணி…. இணைந்து 3 வாரம் ஆச்சு”…. புதுக்கோட்டையில் கு.ப.கிருஷ்ணன் போட்ட வெடி…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

"அதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து மூன்று வாரங்களுக்கு மேலாகிவிட்டது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச்…

6 minutes ago

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

46 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

46 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

57 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

1 மணத்தியாலம் ago