அன்பில் மகேஷை முந்திய நேரு மகன்…. திருச்சியில் மாறும் திமுக பவர் சென்டர்?…. உடன்பிறப்புகள் ஷாக்… ஸ்டாலின் எடுத்த அந்த ஒரு அதிரடி முடிவு….!

Spread the love

திமுகவில் மாவட்ட அமைப்புகளை மறுசீரமைத்து, 110 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கும் பணிகளைத் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தியுள்ளார். வயது வரம்பு மற்றும் 3 முறைக்கு மேல் மாவட்டச் செயலாளராக இருந்தவர்களுக்குப் பதவி மறுப்பு போன்ற புதிய விதிகளால் பல சீனியர்களின் பதவிகள் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட வாரியாகக் கூட்டங்களை நடத்தி அறிக்கை அளிக்க மறுசீரமைப்பு குழு அமைக்கப்பட்டு, அடுத்த 15 நாட்களில் தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகள் 4 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் லால்குடி, மணச்சநல்லூர் அடங்கிய திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகள் அடங்கிய திருச்சி மத்திய மாவட்டம், முசிறி, துறையூர் அடங்கிய வடக்கு மாவட்டம், மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் அடங்கிய தெற்கு மாவட்டம் எனப் புதிய எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த எல்லை மாற்றம் மாவட்ட அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு நேரடியாக மாவட்டச் செயலாளர் ரேஸில் இறங்காவிட்டாலும், அவரின் மகன் அருண் நேருவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த 3 தொகுதிகளை உள்ளடக்கிய ‘திருச்சி மத்திய மாவட்டம்’ ஒதுக்கப்பட்ட வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கும் இதிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் திருச்சி திமுகவில் கே.என்.நேருவின் ஆதிக்கமே தொடர்ந்து மேலோங்கியிருப்பதாக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், மறுசீரமைப்புக்கு முன்பாக அன்பில் மகேஷின் கட்டுப்பாட்டில் 3 தொகுதிகள் இருந்த நிலையில், தற்போதைய மாற்றத்தால் அது 2 தொகுதிகளைக் கொண்ட தெற்கு மாவட்டமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்ட அரசியல் களத்தில் அன்பில் மகேஷைக் காட்டிலும் கே.என்.நேருவின் கரங்களே மீண்டும் ஓங்கியிருப்பதாக உடன்பிறப்புகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

Nanthini

Recent Posts

“2 பிள்ளைகளின் தந்தை…” வேலைக்கு வந்த இளம்பெண்ணை விடாமல்…! போட்டோவை பார்த்து ஷாக்கான காதலன்… பகீர் பின்னணி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…

23 seconds ago

“பிள்ளைகளை வளர்ப்பது அம்மா.. நல்ல அப்பானு பெருமை பேசுவதா…? ரவி மோகனை மறைமுகமாக அட்டாக் செய்த ஆர்த்தி…!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.…

20 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… என் மானத்தை காப்பாத்த இதான் வழி… சாதி வெறியால் தூங்கிக் கொண்டிருந்த… 17 வயது மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை… ஆக்ராவில் பகீர் சம்பவம்…!

ஆக்ராவில் ஜாதிய மறுப்பைத் தாண்டி உறவுமுறையில் ஈடுபட்டதாகக் கூறி, 17 வயது சிறுமி அவரது தந்தையாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…

20 minutes ago

ஐயோ பாவம்… கல்லூரிப் பேருந்து மோதி… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த… 3 மாணவிகள் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள சக்கரம்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த கோர சாலை விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை…

30 minutes ago

“கை, காலில் தொற்று…?” தளராமல் கைகளால் ஆற்றை சுத்தம் செய்யும் வாலிபர்… நகராட்சியை நோக்கிக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார்…

41 minutes ago

“நம்ம 2 பேரும் ஃப்ரண்ட்ஸ்”…. மாணவியிடம் HM செய்த காரியம்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை… பதறும் தமிழகம்….!

திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…

1 மணத்தியாலம் ago