பஞ்சாப் மாநிலம் தார்ன் தரன் பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக 20 வயது வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இப் பகுதியைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங் (20) என்ற வாலிபர், தன் காதலியை வீட்டின் எதிர்ப்பையும் மீறித் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்கள், ஜஸ்ப்ரீத் சிங்கை தனிமையில் மடக்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெறும் 37 விநாடிகளுக்குள் கூர்மையான கத்தியால் 83 முறை அவரைச் சரமாரியாகக் குத்தி ரத்த வெள்ளத்தில் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய ஜஸ்ப்ரீத் சிங் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய ஹர்ப்ரீத் சிங் என்ற முக்கியக் குற்றவாளி தப்பியோடியுள்ள நிலையில், இது ஆணவக் கொலையா (Honor Killing) என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…
தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…
இளம் ஜோடியினர் ஒடிசாவிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த…