கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான ‘பிலிங்கிட்’ மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட முட்டையை உடைத்துப் பார்த்தபோது, அதற்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் உடனடியாக இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்துள்ளார்.
இந்த அதிர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்து, மங்களூருவில் உள்ள பிலிங்கிட் சேமிப்புக் கிடங்கிற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். சோதனையின் போது அங்குச் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, அந்தச் சேமிப்புக் கிடங்கை அதிகாரிகள் உடனடியாகப் பூட்டிச் சீல் வைத்தனர்.
மேலும் கிடங்கை உடனடியாகச் சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், இந்தச் சுகாதாரச் சீர்கேடு தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு பிலிங்கிட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பத் தயாராகி வருகின்றனர். விரைவு விநியோகச் செயலியில் வாங்கப்பட்ட உணவுப் பொருளில் புழு இருந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…