மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு தபாஹி என்ற 20 வயது கல்லூரி மாணவர், தனது பகுதியில் உள்ள மாசடைந்த ஆஜனார் நதியைத் தனது சொந்தப் பணத்திலும் வெறும் கைகளாலும் சுத்தப்படுத்தி வருகிறார். அரசு அல்லது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளைத் தனியாகவே அப்புறப்படுத்தி வருகிறார்.
தொடர்ந்து மாசடைந்த நீரில் பணியாற்ற வேண்டியிருந்ததால், இவரது கை மற்றும் கால்களில் தோலழற்சி ஏற்பட்டுத் தோல் உரியத் தொடங்கியுள்ளது. நதியைச் சுத்தப்படுத்த இயந்திரம் செய்யப் பணம் இல்லாததால், தனது கைகளாலேயே இந்த முயற்சியை தொடர்ந்துள்ளார். சிலர் இவரைப் பாராட்டி ஊக்கப்படுத்தினாலும், பலர் “சாக்கடை சுத்தம் செய்பவன்” என்றும், “பைத்தியக்காரன்” என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து நெட்டிசன்கள் கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். “மக்களிடம் வரி வாங்கும் நகராட்சி செய்யத் தவறிய வேலையை ஒரு வாலிபர் செய்கிறார்; நகராட்சி தனது கடமையிலிருந்து தவறிவிட்டது” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த வாலிபருக்கு அரசு உரிய அங்கீகாரமும் நிதி உதவியும் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…
ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…
தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்…