ஒவ்வொருவரும் நிம்மதியான எதிர்கால வாழ்வுக்கு சரியான முறையில் திட்டமிட வேண்டும். ஓய்வு காலத்திற்குப் பிறகு யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழ இப்போதே நாம் பணத்தை சேமிக்க வேண்டியது அவசியம். அதற்காக அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அஞ்சல் அலுவலக திட்டங்களில் வங்கிகளை விட கூடுதலான வட்டிகள் வழங்கப்படுகிறது. அதன்படி அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் மாதம் வருமானம் தரக்கூடிய ஒரு சிறப்பான திட்டம் ஆகும். இந்த மாதாந்திர வருமானத் திட்டத்தில் தனிநபர் அல்லது கூட்டாக ஒருவர் கணக்கை திறக்கலாம்.
வெறும் ஆயிரம் ரூபாயில் முதலீட்டாளர்கள் கணக்கை தொடங்கலாம். தனிநபராக முதலீடு செய்ய ஒன்பது லட்சம் ரூபாய் அதிகபட்ச வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுக் கணக்காக முதலீடு செய்யும் போது அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் உதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். முதலில் ஐந்து ஆண்டு முதலீடு செய்த பின்னர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் தோறும் வருமானம் வழங்கப்படும். இதில் ஒரு நிதியாண்டிற்கு 1.50 லட்சம் வரையில் வரி சலுகைகளும் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 3083 ரூபாய் வருமானமாக பெற முடியும். ஐந்து ஆண்டுகளுக்கும் இந்த வட்டி வருமானம் கிடைக்கும். அதுவே இந்த திட்டத்தில் அதிகபட்சம் ஒன்பது லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5550 ரூபாய் மாத வட்டி வருமானம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு கிடைக்கும். கூட்டு கணக்கில் ஒரு முறை 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 9250 ரூபாய் மாத வட்டி வருமானம் ஐந்து ஆண்டுகளுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…