Categories: சினிமா

நடிகை ஸ்ரீதேவிக்கு ஒரு தங்கை இருக்காங்களா…? அவங்க இப்போ என்ன பண்றாங்க தெரியுமா…?

Spread the love

நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் சிவகாசிக்கு அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர். இவரது தாய்மொழி தெலுங்கு ஆகும். ஆனால் தமிழ் சரளமாக பேசக்கூடியவர். ஸ்ரீதேவி தனது நான்கு வயதில் 1967 ஆம் ஆண்டு கந்தன் கருணை என்ற பக்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு துணைவன் என்ற பக்தி திரைப்படத்தில் இளம் முருகனாக நடித்தார்.

பின்னர் தென்னிந்தியாவில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக சிறப்பாக நடித்து விருதை வென்ற ஸ்ரீதேவி தொடர்ந்து தெலுங்கில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். தமிழில் 1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு திரைப்படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து கமலஹாசன் மற்றும் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிடப்பட்டவர். தனது நடிப்பிற்காக நான்கு பிலிம்பேர் விருதுகள், ஒரு வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய திரைப்பட விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது. ஒரு கேரள மாநில திரைப்பட விருது, ஒரு நந்தி விருது ஆகியவற்றை வென்றவர். 50 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் பணியாற்றிய நடிகை ஸ்ரீதேவி, 2013 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதையும் பெற்றார். இந்தியாவின் மிகச் சிறந்த நடிகை என்று மக்கள் வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி தனது வாழ்நாளில் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர். பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக புகழ் பெற்றவர் ஸ்ரீதேவி. அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் ஆனவை. தொழில் வாழ்க்கையில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குடும்பத்தை பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஸ்ரீ தேவியின் அம்மா அப்பா யார் அவர் உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் சமீபத்தில் ஸ்ரீதேவி உடன் அவருடைய தங்கை இருக்கும் ஒரு புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதை பார்த்ததும் நெட்டிசன்கள் ஸ்ரீதேவிக்கு தங்கை இருக்கிறாரா என்று விவாதித்தனர். ஆம் ஸ்ரீதேவிக்கு ஒரு தங்கை இருக்கிறார். அவரது பெயர் ஸ்ரீ லதா என்பதாகும்.

வெள்ளை பட்டு சேலை உடுத்தி இருக்கும் ஸ்ரீதேவியுடன் மாடர்ன் டிரஸ் அணிந்திருக்கும் அவரது தங்கையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி இருந்தது. ஆராய்ச்சிகளின் படி ஸ்ரீதேவி தனது தங்கை உடன் மிகுந்த அன்பாகவும் பாசமாகவும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் சில பணப் பிரச்சினைகளால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ தேவி நடிக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் அவரது தங்கையான ஸ்ரீ லதா உடன் சூட்டிங்க்கு வருவாராம். அவரும் நடிகையாக வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். ஆனால் அவரால் அது முடியாத காரணத்தால் ஸ்ரீதேவியின் மேனேஜராக இருந்து வந்திருக்கிறார்.

ஸ்ரீதேவியின் தாயார் 1996 ஆம் ஆண்டு மறைந்த பின்பு அவரது அம்மாவின் இறப்புக்கு பிறகு ஸ்ரீதேவிக்கு 7 கோடி இழப்பீடு கிடைத்ததாகவும் அந்த இழப்பீடு தொகையை ஸ்ரீதேவி அவரே வைத்துவிட்டதாகவும் கூறி ஸ்ரீ லதாவிற்கும் ஸ்ரீதேவிக்கும் பிரச்சனை எழுந்துள்ளது இதற்காக ஸ்ரீ லதா ஸ்ரீதேவியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் மூலம் ஸ்ரீதேவியிடம் இருந்து இரண்டு கோடி இழப்பீடை பெற்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீ லதா இருவரும் பிரிந்து விட்டனர். அதற்குப் பிறகு ஸ்ரீதேவி இறப்பிற்கு கூட ஸ்ரீலதா வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

admin

Recent Posts

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

22 minutes ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

1 மணத்தியாலம் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

1 மணத்தியாலம் ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

2 மணத்தியாலங்கள் ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

2 மணத்தியாலங்கள் ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

2 மணத்தியாலங்கள் ago