PostOfficeScheme: வெறும் 5 வருடத்தில் அட்டகாசமான வருமானம்… அசத்தலான வட்டி… பாதுகாப்பான அரசு திட்டம்..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

இந்திய தபால் துறை அஞ்சல் சேவைகளோடு காப்பீடு மற்றும் வங்கி சேவைகளையும் வழங்கி வருகிறது. தபால் துறையில் வங்கிகளை போலவே சாதாரண சேமிப்பு திட்டங்களின் கீழ் கணக்குகள் திறக்கப்படுகிறது. அப்படி ஏராளனமான திட்டங்களில் ஒன்று தொடர் வைப்பு திட்டம்(RD) திட்டம்.  இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 2,200 டெபாசிட் செய்தால் அறுபது மாதங்களில் எவ்வளவு  தொகை கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

RD திட்டத்தில் 6.7% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் 100 ரூபாய் மாதாந்திரமாக முதலீட்டு தொகையோடு கணக்கை திறக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. பத்து வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இந்த கணக்கை தொடங்கலாம். கூட்டு கணக்கிலும் திறக்க முடியும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதை மூடலாம். ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலகத்தின் RD கணக்கில் ரூ.2200 டெபாசிட் செய்தால், 60 மாதங்களுக்குப் பிறகு அதாவது திட்டம் முடிவடையும் போது மொத்தம் ரூ.1,57,004 கிடைக்கும். இந்த தொகையில் நீங்கள் டெபாசிட் செய்தது டெபாசிட் செய்த ரூ.1,32,000 மற்றும் ரூ.25,004 வட்டி ஆகும்.