கிரீன் சிக்னல் கொடுத்த பாஜக… மீண்டும் BJP கூட்டணியில் சேரும் OPS..? இன்னும் சற்றுநேரத்தில் தமிழக அரசியலில் அடுத்த திருப்பம்..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்துக் கட்சிகள் இடையும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஓபிஎஸ் எந்த பக்கம் செல்வது என்றே தெரியாமல் நடுவில் நின்று கொண்டிருக்கின்றார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக  சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.

அதேசமயம்  தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஓபிஎஸ் பேசியுள்ளார். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விஜய் கட்சியில் இணைந்து விடுங்கள் என்றும் கூறி வருவதாக தகவல் வெளியானது. இதனால் யாரோடு  இணைய போகிறார் எனறு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில்  இன்று தமிழகம் வரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷை சந்திக்க வருமாறு  ஓபிஎஸ் க்கு பாஜக அழைப்பு விடுத்தது.

   

இதுகுறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ்  ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், ஒருதரப்பினர் பாஜகவுடன் இணையக் கூடாது என்றும், மற்றொரு தரப்பினர் தற்போதை சூழலில் பாஜகவுடன் இணைவதுதான் சரி  என்றும் கூறியுள்ளதாக  சொல்லப்படுகிறது. இன்னும் சற்றுநேரத்தில் கூட்டணி குறித்து ஓபிஎஸ் முடிவு எடுக்கவிருக்கிறார்.