நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு வழக்கு தொடர்பாக, திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் கே.என்.மணிவண்ணன், என்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முறைப்படி வழக்குப்பதிவு செய்து (FIR) நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம் நேருவுக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது எஃப்.ஐ.ஆர் வெளியான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக கே.என்.நேரு விரைவில் கைது செய்யப்படக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
