இரவில் தனியாக அழுதுகொண்டிருந்த 3 வயது குழந்தையைக் கண்ட ஆறாம் வகுப்பு படிக்கும் சீனச் சிறுமி, அக்குழந்தைக்குச் சர்க்கரை அளவு குறைந்திருக்கலாம் எனக் கருதி உடனே அருகில் இருந்த கடையில் மிட்டாய் வாங்கித் தந்துள்ளார். பின்னர், தன் விவரங்கள் எதையும் தெரிவிக்காமல் அக்குழந்தையைப் பத்திரமாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தார்.
ரெஸ்டாரண்ட்டில் பெற்றோர் பணியில் தீவிரமாக இருந்த நேரத்தில், அந்தச் சிறு குழந்தை யாருக்கும் தெரியாமல் வெளியே தப்பிச் சென்றுள்ளது. தன் குழந்தையைக் காணாமல் தேடி அலைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் பத்திரமாகக் மீட்டனர். தொடர்ந்து, குழந்தையைக் காப்பாற்றிய சிறுமிக்கு நன்றி தெரிவிக்க விரும்பி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அச்சிறுமி ஒரு பள்ளி மாணவி என்பதைக் கண்டறிந்தனர்.
https://twitter.com/iw4o2/status/2096694610613674376/video/1
அதன் பிறகு, அச்சிறுமி படிக்கும் பள்ளிக்கு நேரில் சென்ற பெற்றோர், அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் பூங்கொத்து, பணமுடிப்பு மற்றும் தங்கள் ரெஸ்டாரண்ட்டில் வாழ்நாள் முழுதும் இலவசமாக ‘ஸ்டீக்’ உணவை உண்பதற்கான ‘VIP கார்டு’ ஆகியவற்றை வழங்கித் தங்களின் நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தனர்.
