மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகரான பிரேம் நசீரின் மகனும், மூத்த நடிகருமான ஷானவாஸ் (71) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். சிறுநீரகம், இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு வந்த அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 11.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஷானவாஸ் 1987-ல் தமிழில் வெளியான ‘ஜாதிப்பூக்கள்’ படம் உட்பட தமிழ், மலையாள மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
