பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ரன்சோன் (James Ransone), தனது 46-வது வயதில் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகத்தின்படி, ஜேம்ஸ் ரன்சோன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வர் உலகப்புகழ் பெற்ற ‘The Wire’ தொடரில் ‘ஜிக்கி சோபோட்கா’ (Ziggy Sobotka) என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானவர். மேலும், ஹாரர் திரைப்படமான ‘IT: Chapter 2’-வில் எடி காஸ்ப்ராக் (Eddie Kaspbrak) பாத்திரத்திலும், ‘The Black Phone’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார். நீண்ட காலமாக மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடி வந்த ஜேம்ஸ், அண்மைக்காலமாகத் தனிப்பட்ட வாழ்வில் பெரும் சவால்களைச் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
