16 லட்சம் பணப்பெட்டியை சேர்க்காமல், பிக் பாஸில் பூர்ணிமா வாங்கிய சம்பளம் மட்டும் இத்தனை லட்சமா..?

By Mahalakshmi on தை 7, 2024

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இருந்தாலும் அதே சமயத்தில் இந்த நிகழ்ச்சியை கலாய்த்தும் தள்ளுகிறார்கள். இந்த சீசன் மட்டும் மக்களிடமிருந்து அதிக வெறுப்பை சம்பாதித்தது இருக்கிறது. அதற்கு காரணம் நிறைய  இருந்தாலும் இன்னொரு பக்கம் கமலஹாசனின் ஒரு தலைப்பட்சமாக  கொடுக்கும்  தீர்ப்பு தான்.

   

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையில் கடந்த வருடம்  அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 97 நாட்களை கடந்து இருக்கிறது. 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் Final Task வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர  ஏழு போட்டியாளர்கள் நாமினேட்  செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

   

 

இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் 14 வாரத்தில் வைக்கப்பட்டுள்ளது பணப்பெட்டி டாஸ்க், இதை பூர்ணிமா புத்திசாலித்தனமாக 16 லட்சம் பணப்பெட்டியை எடுத்து கொண்டு சென்று விட்டார். இந்த வகையில் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்கு இவருக்கு சம்பளமாக 14 லட்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 16 லட்சம் பணப்பெட்டி மற்றும் 14 லட்சம் சம்பளம் சேர்த்து மொத்தமாக  30 லட்சத்தை கைப்பற்றி கொண்டு போயிருக்கிறார் பூர்ணிமா.

 

இதை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்த பூர்ணிமாவின் அலப்பறை தாங்கமுடியவில்லை. இவரை இரண்டாவது வாரத்திலேயே மக்கள்  வெளியேற்ற நினைத்தார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை காப்பாற்றி கொண்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து இந்த வாரம் எலுமினேட் செய்யப்பட்டு விசித்ரா வெளியே போவார்கள் என்று கருத்து கணிப்பு கூறுகிறது.