‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’.. பாடல் வரியில் பிழை உள்ளது என்று மாற்ற சொன்ன வசனகர்த்தா.. மாற்றினாரா கண்ணதாசன்?

By Archana

Published on:

சில சமயங்களில் இயக்குநர், தயாரிப்பாளர் சொல்வதை கேட்க மாடார்கள், கவிஞர்கள் தங்களது வரிகளை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு படம் என்பதே கூட்டு முயற்சி தானே தவிர ஒருவரை வைத்து மாட்டார்கள், இசையமைப்பாளர்கள் தங்களது டியூன்களை மாற்ற மட்டும் ஹிட்டாவதில்லை. அப்படி எடுக்கப்பட்ட பல முன்னனி ஹீரோக்களின் படங்களே படுதோல்வி அடைந்த கதை ஆயிரம் உண்டு. ஆனால் அந்தக் காலத்தில், மாபெரும் கலைஞர்கள் கூட மற்றவர்களின் அறிவுரையை எற்றுக் கொள்வார்கள். அப்படி ஏற்றுக் கொண்டவர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவரு. மனிதனுக்கு தோன்றும் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர் கொடுத்தவர் கண்ணதாசன்.

202107171513441482 Kaviyarasar Kannadasan said on the topic of maturity SECVPF

அவர் ஒரு படத்தில் வசனகர்த்தா சொன்னதைக் கேட்டு தனது பாடல் வரிகளை திருத்திக் கொண்டார் என்றால் நம்ப முடிகிறதா? சிவாஜி சரோஜா தேவி நடிப்பில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியாள படம் புதிய பறவை. ஒரு கொலையை கண்டுபிடிக்க, காவல்துறையை சேர்ந்தவர்கள் நாயகனின் வீட்டில் நுழைந்து விசாரணை நடத்தும் பாணியில் வெளியான இந்த படம் அந்த காலக்கட்ட ரசிகர்கள் மட்டுமல்லாமல் இப்போது உள்ள ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரொமான்டிக் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் சிவாஜி மற்றும் சரோஜா தேவியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்ற நிலையில், தாதா மிரசி இந்த படத்தை இயக்கியிருந்தார்.

   
Profile picture of Kannadasan

சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு எம்.ஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். படத்தின் அத்தனை பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தில் இடம் பெற்ற, பார்த்த ஞாபகம் இல்லையோ, சிட்டுக்குருவிக்கு முத்தம் கொடுத்து, எங்கே நிம்மதி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தில் சிவாஜி சரோஜா தேவி இடையேயான ரொமான்டிக் காட்சிகள் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இந்த காட்சிகளை மறைந்த நடிகர் விவேக் – எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் குரு என் ஆளு படத்தில் ரீமேக் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kuruvi 900x506

இந்த நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற சிட்டுக் குருவி முத்தம் கொடுத்தால் என்ற பாடலை கவியரசர் கண்ணதாசன் எழுதும் போது, படத்தின் வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் உடன் இருந்துள்ளார். அப்போது கண்ணதாசன் வரிகளை சொல்ல, அவரது உதவியாளர் எழுதிக்கொண்டு இருந்துள்ளார். இதில் இரண்டாவது சச்ரணத்தில், ஒரு தடவை தேன் குடித்து மடியில் விழுந்தேனா என்று கண்ணதாசன் கூறியுள்ளார். இதனை கேட்ட வசன கர்த்தா ஆரூர்தாஸ், கவிஞரே இது ஆண் பாடுவதா அல்லது பெண் பாடுவதா எனக் கேட்க, கண்ணதாசன் பெண் பாடுவது என்று சொல்ல, பெண் என்பவள் தேன் கொடுப்பவள் என்று சொல்ல, உடனடியாக அதை ஏற்றுக்கொண்ட கண்ணதாசன் ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா என்று மாற்றியுள்ளார். இதை கேட்டு ஆரூர்தாஸ், ஒரு சொல்லை மாற்றியதால் பாடல் எங்கேயோ சென்றுவிட்டது என்று கூறியுள்ளார்.

1140244
author avatar
Archana