தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. 2021 ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் லீட் ரோல் கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீஷ் நடித்து வருகின்றார்.
அது மட்டும் இல்லாமல் இவர்களுக்கு எழில், செழியன், இனியா என்று மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் செழியனின் மனைவியாக நடிப்பவர் ஜெனி. ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷுக்கு அம்மாவாக நடித்து வருபவர் தான் மோனா பர்த்டே.
கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஓநாயும் ஆட்டுக்குடியும் படத்தில் கண்பார்வை இல்லாத நபராக நடித்திருந்தார். பல சீரியல்களில் நடித்து வரும் இவர் தற்போது வரை இளமையாக இருந்து வருகிறார். தற்போது மாடன் உடையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போய் இருக்கிறார்கள்.
View this post on Instagram