மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்தத் திரைப்படத்தை கே ஆர் சச்சிதானந்தன் இயக்கியிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பிஜு மோன் மற்றும் பிரித்திவிராஜ் இணைந்து நடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும்.
இப்படத்தில் ஐயப்பனாக நடித்த ஆதிவாசி பகுதியை சேர்ந்தவர் விஜி. ரிடைய்ட்டான ராணுவ வீரராக கோஷி வேடத்தில் பிரித்திவிராஜ் நடித்திருப்பார். இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் இந்த படம். மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தமிழில் இயக்குவதற்கு பல இயக்குனர்கள் முயற்சி செய்து வந்தனர். ஆனால் கடைசிவரை அது முடியாமல் போனது.
இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இயக்குனர் சுந்தர் சி மிகவும் ஆசைப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இப்படத்தை இயக்குவதற்கு முடிவு செய்திருந்த நிலையில் படத்தின் ரைட்ஸ் வேறு ஒருவருக்கு சென்று விட்டது. பின்னர் அவர்களும் அப்படத்தை எடுக்காமல் வைத்திருந்தனர். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் தன்னிடம் இப்படத்தை எடுக்கிறீர்களா? என்று கேட்டார்கள் ஆனால் அப்போது எனக்கு அந்த திரைப்படத்தை இயக்குவதற்கான ஆர்வம் சென்று விட்டது என தெரிவித்திருந்தார் சுந்தர் சி.