வைரமுத்துவுடன் வந்த போட்டோவால் எழுந்த சர்ச்சை.. அந்த நடிகருடன் வந்த Selfie-யால் மாறிய வாழ்க்கை.. பலரும் அறிந்திடடத BB அர்ச்சனாவின் மறுபக்கம்..

By Sumathi

Updated on:

விஜய் டிவியில் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா என்பது ஏறக்குறையாக உறுதியாகி இருக்கிறது. ஆனால் எதிர்பாராததை எதிர்பாருங்கள் எனக்கூறும் பிக்பாஸ், கடைசி நொடியில் மாயாவை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாரதியார் மீது அதிக பற்றுக்கொண்ட தமிழ் பேராசிரியரின் மகள்தான் அர்ச்சனா. சென்னைதான் சொந்த ஊர். ஆரம்பம் முதலே தன் மகளுக்கு பாரதியார் கவிதைகளையும், வைரமுத்து போன்றவர்களின் தமிழ் ஆளுமை படைப்புகளையும் தன் மகளுக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்.

vj archana raja rani 2

அப்போது ஒருமுறை வைரமுத்துவை சந்திக்கும் அவர், வைரமுத்துவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட, சின்மயி, பார்த்து உஷாரா இருந்துக்கோ என்று பதிவிட, அது வைரலாகி அர்ச்சனாவுக்கு ஒரு அடையாளம் கிடைக்கிறது. பள்ளி படிப்பை முடித்து ஒரு கட்டத்தில் வளர்ந்தபிறகு அர்ச்சனா, இன்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டு இருக்கிறார். மகள் ஐஏஎஸ் அல்லது டாக்டர் படிக்கட்டும் என ஆசைப்பட்ட அப்பா, கடைசியில் அவர் இன்ஜினியரிங் படிக்க சம்மதித்து இருக்கிறார்.

   
1633346 h 589d9a92b86b

அர்ச்சனா டப் மேட்ச் ஒன்றை, சேனல் நடத்திய போட்டிக்கு அனுப்ப அது முதலிடத்தில் தேர்வாகிறது. காம்ப்யரிங் செய்யவும் வாய்ப்பு வருகிறது, அர்ச்சனா மிக ஆர்வம் காட்ட அவர் அப்பா துவக்கத்தில் மறுக்க, ஒரு கட்டத்தில் அதற்கு சம்மதிக்கிறார். டிவி சேனல்களில் காம்ப்யரிங் செய்த அர்ச்சனா, மற்ற சில சேனல்களிலும் ப்ரீலான்ஸ் முறையில் பணியாற்றுகிறார். அப்போது அங்குள்ள ஒரு பொட்டிங் ஷாப்புக்கு சென்று உடைகள், ஆபரணங்கள் தனக்கு வாங்க சென்று, அந்த கடையை நடத்தும் பெண் உரிமையாளரிடம் நட்பாக பழகுகிறார்.

archana

ஒரு நாள், நடிகர் கலையரசன், (மெட்ராஸ் படத்தில் அன்பு கேரக்டரில் நடித்தவர்) அங்கு வர அர்ச்சனா ஆச்சரியப்பட்டு போகிறார். அதன்பிறகு அது கலையரசன் மனைவி நடத்தும் கடை என்று அர்ச்சனாவுக்கே தெரிய வருகிறது. கலையரசனுடன் அர்ச்சனா செல்பி எடுத்து, அதை கலையரசனுக்கு டேக் செய்ய அவரும் அதை போஸ்ட் செய்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த விஜய் டிவி ராஜா ராணி சீரியலின் டைரக்டர், அந்த பெண் யார், எனது சீரியலில் அவர் நடிக்க வேண்டும் என்று கலைரசனிடம் விவரம் கேட்கிறார்.

copyofcopyofcopyofuntitleddesign54 1671107267

 

அப்படி அவருக்கு சீரியல் வாய்ப்பு வருகிறது. ஆனால், வீட்டில் அர்ச்சனாவின் அப்பா இதற்கு சம்மதிக்க மறுக்கிறார். பாரதியார் சொன்ன பெண்ணடிமைதானே இதுவும் என அர்ச்சனா, அவரது பலவீனத்தில் கைவைக்க ஒருவழியாக அவரும் ஒத்துக்கொள்ள, ராஜா ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார் அர்ச்சனா. இப்போது பிக்பாஸ் வீட்டிலும் அவர்தான் டைட்டில் வின்னர் என்ற நிலையில், அவரது வெற்றிப் பயணம் தொடர்கிறது.

author avatar
Sumathi