இந்திய நாட்டில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் உயர் கல்வியை பெற வேண்டும் என்ற நோக்கிலும் நாட்டில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வி பெற வேண்டும் என்ற கனவை நினைவாக்க மத்திய அரசு பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா எனும் புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வியை எளிதாக பெற முடியும். அதன் முழு விவரங்களை பற்றி இனி காண்போம்.
பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெரும் மாணவர்களுக்கு எந்தவித அதிகப்படியான கட்டணங்கள் இல்லாமல் நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெற முடியும். ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் அல்லது அதற்கு குறைவான வருமானத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
இந்தத் திட்டத்தின் மூலமாக 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீதம் வட்டி மானியமும் கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் தொகைக்கு உத்தரவாதம் வழங்குவதால் 7.5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் கிடைக்கும். இதனால் வங்கிகள் மாணவர்களுக்கு எளிதாக கடன்களை வழங்கும். இந்த திட்டத்தை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் பலனை பெற விரும்பும் மாணவ மாணவியர்கள் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.vidyalakshmi.co.in/students/ என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்க வேண்டும்.
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் 860 சிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படும். மாணவர்கள் சேர விரும்பும் கல்லூரியில் NIRF ஒன்றிலிருந்து நூறு வரையில் இருக்க வேண்டும். மாநில அளவில் கல்லூரியின் தரவரிசை 200 வரை என்ற அளவில் இருக்க வேண்டும். இது தவிர அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி நிறுவனம் அரசுக்கு சொந்தமானதாக இருப்பதும் அவசியமானது. இந்த பிரதான் மந்திரி வித்யாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்கள் எளிதாக தங்களது உயர்கல்வியை பெற முடியும்.