கிழக்கு சீமையிலே பட பேச்சியா இது..? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..?

By Soundarya on டிசம்பர் 31, 2024

Spread the love

அஸ்வினி நம்பியார் என்று அழைக்கப்படும் ருத்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அஸ்வினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது ஒரு மலையாள பத்திரிகைக்காக தனது வகுப்பு தோழிகளுடன் மாடலிங் பணிகளை செய்தார். அப்போது அந்த பத்திரிகையை பார்த்து இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். பாரதிராஜா அவர்களின் மூலம் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார் அஸ்வினி.

   

தொடர்ந்து தூரத்து சொந்தம், 1993 ஆம் ஆண்டு கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கிழக்கு சீமையிலே திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பிரபலமானார் அஸ்வினி. ஆத்தங்கர மரமே என்ற பாடல் இன்றளவும் பிரபலமான பாடலாக உள்ளது. தொடர்ந்து புதுப்பட்டி பொன்னுத்தாயி, முதல் பயணம், பெரிய தம்பி, கள்ளழகர், என்னவளே போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் அஸ்வினி.

   

 

திருமணத்திற்கு பிறகு சிங்கப்பூரில் சென்று செட்டிலான அஸ்வினி சிங்கப்பூரில் எடுக்கப்படும் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் கூட இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இரண்டாவது கதாபாத்திரம் சுகந்தி கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கேட்டார்கள் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

அதே திரைப்படத்தில் அந்த கதாபாத்திரம் வேண்டாம் என்று சொன்னபோதும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் வரும் அதில் கௌதமி மேம் டான்ஸ் ஆடி இருப்பாங்க. அந்த பாட்டுக்கும் என்னை டான்ஸ் ஆட கூப்பிட்டாங்க அதையும் நான் மிஸ் பண்ணிட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவருடைய லேட்டஸ்ட் போட்டோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ASHWINI NAMBIAR (@officially_ashwini)