wlm

இந்த 5 விஷயங்களை செஞ்சா உங்கள் உடல் எடை கண்டிப்பாக குறையாது… அதெல்லாம் Weight Loss Myth தான்…

By Meena on டிசம்பர் 31, 2024

Spread the love

உடம்பை Fit ஆக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். ஒரு சிலர் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு டயட் உடற்பயிற்சி போன்றவைகள் செய்வார்கள். சிலர் நினைப்பதோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால் நம் நாட்டில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை உடல் எடை அதிகரிப்பு. அதற்கு காரணம் நம்முடைய மோசமான உணவு பழக்க முறைகள் தான். அதனால் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பலர் டயட் இருந்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இந்த புத்தாண்டில் கூட அதை ஆரம்பிக்கலாம் என்று நினைப்பார்கள். அப்படி நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் போது இந்த ஐந்து விஷயங்களை கட்டாயம் செய்யாதீர்கள். அது செய்தாலும் உங்களின் உடல் எடை குறையாது. அது வெறும் Weight Loss Myth தான் என்று கூறப்படுகிறது. அது என்னவென்று இனி காண்போம்.

   

முதலாவதாக உடல் எடை குறைப்பதற்கு டயட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடவே கூடாது என்று தவிர்ப்பார்கள். இது உண்மை கிடையாது. முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகளில் பதப்படுத்தப்படாத கார்போஹைட்ரேட் இருக்கின்றன. அந்த மாதிரியான கார்போஹைட்ரேட் உடம்புகளுக்கு அவசியமான ஒன்று. சிறிதள்வு அரிசி சாதத்தையும் சாப்பிடலாம். கார்போஹைட்ரேட் உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது தான் உங்களுக்கு ஆற்றலும் கிடைக்கும். வயிறு நிறைவை கொடுக்கும். அடிக்கடி பசி எடுக்காது. இதன் மூலம் உடல் எடை குறைப்பில் கார்போஹைட்ரேட்டும் பலன் கொடுக்க தான் செய்யும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

   

அடுத்ததாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட் மேற்கொள்வர்கள் குறைவாக சாப்பிட வேண்டும் என்று முடிவெடுத்து விடுவார்கள். உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை குறையும் என்பது உண்மையல்ல. நீங்கள் சாப்பிடும் அளவில் ஊட்டச்சத்து குறைவில்லாத அனைத்து சத்துகளும் கிடைக்கக்கூடிய உணவுகளை பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பாட்டை குறைத்தால் மட்டுமே உங்கள் உடல் எடை குறையாது.

 

அடுத்ததாக உடற்பயிற்சி செய்தால் போதும் உடல் எடை குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உடற்பயிற்சி மற்றும் போதாது. சீரான ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்ச்சியான உடல் செயல்பாடு ஆகியவற்றை பின்பற்றினால் தான் உடல் எடை குறையும். நீங்கள் உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடு செய்யவில்லை என்றால் உங்கள் உடல் எடை அதிகரித்து விடும்.

அதேபோல் சிலர் உடல் எடை குறைக்க வேண்டும் என்று சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டும் சாப்பிடுவேன் என்றும் கூறுவார்கள். ஆனால் இது மிகவும் தவறான ஒன்று. சாப்பிடாமல் இருந்தால் கட்டாயம் உங்கள் உடல் எடை குறையாது. நீங்கள் அடுத்த வேளை சாப்பிடும்போது அது உங்களை அதிகமாக தான் சாப்பிட தூண்டும். அதனால் சாப்பிடாமல் இருப்பதும் உடல் எடை குறைப்புக்கு உதவாது.

இறுதியாக டயட் இருப்பவர்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடவே கூடாது என்பார்கள். ஆனால் அனைத்து கொழுப்புகளும் கெட்டவைகள் அல்ல. உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த நெய், அவகோடா, நட்ஸ் ஆகியவை மிகவும் தேவை. இவைதான் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும் ஹார்மோன்களை சரியாக இயங்கவும் மூளை சரியாக தன் வேலையை செய்வதற்கும் நல்ல கொழுப்புகள் மிகவும் அவசியமானது. இந்த ஐந்து வகையான Weight Loss Myth பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். உண்மையில்லாத விஷயத்தை நம்பி ஏமாறாதீர்கள்.