child

உங்கள் குழந்தைகள் பொய் பேசுகிறார்களா…? அதற்கு பெற்றோர்கள் எப்படி React செய்ய வேண்டும் தெரியுமா…?

By Meena on டிசம்பர் 31, 2024

Spread the love

ஒவ்வொருவர் வாழ்விலும் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது. குழந்தைகள் வளரும் பருவத்தில் பலவித சேட்டைகள் செய்வார்கள். அதில் ஒன்றுதான் பொய் கூறுவது. இது வளரும்போது இயல்பாகவே அவர்கள் வெளியில் சென்று நண்பர்களோடு பழகும் போது இந்த ஒரு பொய் சொல்லும் பழக்கமும் வந்துவிடும். ஆனால் குழந்தைகள் பொய் சொல்லும் போது அளவுக்கு அதிகமாக நாம் கோபப்படுவது திட்டுவது அடிப்பது போன்றவைகள் செய்யக்கூடாது. அப்போது குழந்தைகள் பொய் கூறும் போது என்னதான் செய்ய வேண்டும்? பெற்றோர்கள் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதை பற்றி இனி காண்போம்.

   

உங்களது குழந்தைகள் உங்களிடம் சில பொய்களை பேசும்போது பெற்றோர்கள் உடனடியாக கோபப்படக்கூடாது. அவர்கள் சொல்லும் போது என்ன கூற வருகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க வேண்டும். எதற்காக அவர்கள் பொய் சொல்கிறார்கள் அதற்கான உண்மை காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும்.

   

ஒரு சில குழந்தைகள் அவர்கள் முன்பு பெற்றோர்கள் பொய் கூறுவதை பார்த்துக் கற்றுக் கொள்வார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைகள் முன் பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் பொய் பேசி விட்டார்கள் என்று தெரிந்த பிறகு அவர்களை திட்டுவது அடிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள்.

 

உடனடியாக நாம் திட்டுவோ அல்லது அடிக்கவோ செய்யும்போது அவர்கள் பொய் பேசக்கூடாது என்பதை நினைக்க மாட்டார்கள். அதிகப்படியாக மற்றும் மாட்டிக்கொள்ளாமல் பொய் பேச வேண்டும் என்று தான் அவர்களுக்கு தோன்றும். அவர்கள் சொல்ல வருவதை கேட்டு வேறு ஏதாவது சந்தர்ப்பத்தில் பொய் கூறக்கூடாது என்பதை தன்மையாக எடுத்து கூற வேண்டும்.

குழந்தைகள் ஏதாவது நேர்மையோடு ஒரு சேலை செய்யும்போது அதற்கு மிகுந்த பாராட்டு அளிக்க வேண்டும். அப்போது அவர்கள் அந்த நேர்மையான விஷயத்தை அதிகமாக செய்ய பழகுவார்கள். குறிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்கள் போல் பழகினாலே எல்லா உண்மையும் அவர்கள் வந்து நம்மிடம் சொல்லுவார்கள். எப்போதும் பெற்றோர்களிடம் குழந்தைகளுக்கு ஒரு பய உணர்வை ஏற்படுத்தக் கூடாது. அவர்களை தட்டிக் கொடுத்து நீ என்ன நடந்தாலும் நேராக வந்து சொல் நான் உனக்கு ஆதரவு தருகிறேன் என்று கூறினால் குழந்தைகள் பொய் சொல்வதை நம்மால் தவிர்க்க இயலும்.