Categories: சினிமா

‘இதுக்கு ok-னா உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்குறன்’.. நடிகை சரண்யா அப்பாவிடம், பொன்வண்ணன் போட்ட கண்டிஷன்..

Spread the love

நடிகை சரண்யா, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில் அறிமுகமானார். கருத்தம்மா படம், இவருக்கு நல்ல அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த சரண்யா, இன்று அஜீத், தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நேர்காணல் ஒன்றில், சரண்யாவின் கணவர் நடிகர் பொன்வண்ணன் கூறியதாவது, பாரதிராஜா இயக்கத்தில், கருத்தம்மா படத்தில் சரண்யா நடிக்கிறார். அந்த படத்தில் நான் அசோசியேட் டைரக்டராக இருக்கிறேன். அந்த அளவில்தான் அந்த படத்தில் அவருடன் எனக்கு பழக்கம். அப்போது என் வீட்டில் எனக்கு பெண் பார்க்கின்றனர். எனக்கு சட்டென சரண்யாதான் மனதில் வந்து நிற்கிறார்.

அவருக்கு உடனே போன் செய்தேன். உங்க கால்ஷீட் வேண்டும் என்று கேட்டேன். அப்படியா சார், ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள், எத்தனை நாள் ஷூட்டிங் எனக் கேட்டார். 70 வருஷம் வேண்டும் என்று நான் சொன்னவுடன் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், அப்புறம் சொல்றேன் என போனை வைத்துவிட்டார். இதுகுறித்து சரண்யாவின் அப்பா, இயக்குநர் பாரதிராஜாவிடம் சென்று பேசியிருக்கிறார். அவர்கள் வீட்டுக்கு சென்ற குடும்பத்தினருடன் பேசிய பாரதிராஜா, இந்த மாதிரி ஒரு நல்ல பையன் உங்களுக்கு கிடைக்க மாட்டேன். உடனடியாக கமிட் பண்ணுங்க என சொல்லி இருக்கிறார்.

அதுக்கப்புறம் சரண்யாவின் அப்பா, என்னிடம் பேசினார். இங்க பாருங்க, நான் சினிமாவில் இருக்கிறேன். அதிகபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்னால் சம்பாதிக்க முடியும். அந்த வருமானத்துக்குள் உங்க பொண்ணால் குடித்தனம் நடத்த முடியும் என்றால், கண்டிப்பாக கல்யாணம் செய்துக்கொள்கிறேன். என கூறிவிட்டேன். அதற்கு பிறகுதான் எங்கள் திருமணம் நடந்தது எனக் கூறியிருக்கிறார் நடிகர் பொன்வண்ணன். இவர் பல படங்களில் சிறந்த நடிப்பை தந்து இருக்கிறார். குறிப்பாக, பருத்திவீரன் படத்தில் பிரியாமணி அப்பாவாக மிரட்டலான ஒரு நடிப்பில் பொன்வண்ணன் அசத்தியிருப்பார். அதே போல், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மூத்த அண்ணணாக, பாசமான நடிப்பில் அசர வைத்தவர் நடிகர் பொன்வண்ணன்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

28 minutes ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

31 minutes ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

41 minutes ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

1 மணத்தியாலம் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

1 மணத்தியாலம் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

1 மணத்தியாலம் ago