வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் போன்ற வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் பொன்ராம். ஆனால் அவர் அடுத்து இயக்கிய சீமராஜா டிஎஸ்பி எம்ஜிஆர் மகன் போன்ற படங்கள் சரியாக போகவில்லை. அதே போல் சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த கொம்புசீவி படமும் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இயக்குனர் பொன்ராம் கூறியதாவது, நான் டிரைவராக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இயக்குனர் ஆனேன். என் படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். ஆனால் சில படங்களில் அது மிஸ்ஸிங் ஆனது. இனிமேல் எனது பழைய பாணியில் படங்களை இயக்குவேன். என் கதைகளில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று இயக்குனர் பொன்ராம் கூறியிருக்கிறார்.
