இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர். பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை அனைவரும் சேமிக்கும் வகையில் வங்கிகள் முதல் தபால் நிலையம் வரை பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக பொன்மகள் சேமிப்பு திட்டம் தபால் நிலையத்தில் செயல்பாட்டில் உள்ள நிலையில் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் சேமித்து வைக்க முடியும். அதனைப் போலவே உங்கள் வீட்டில் உள்ள மகனுக்கும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண் குழந்தைகளுக்காக பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த வைப்பு நிதி திட்டம் ஆண் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் படிப்புக்காக பெற்றோர் பணத்தை சேமிக்க உதவுகின்றது.

உங்களின் பத்து வயதுக்கு உட்பட்ட மகனின் பெயரில் பொன்மகன் வைப்பு நிதி கணக்கை நீங்கள் திறக்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை உங்களால் சேமிக்க முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாய் செலுத்தி கணக்கை தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் வரை தவணை செலுத்தலாம். ஒரே முறை முதலீடாகவோ அல்லது மாத தவணைகளாகவோ இதில் சேமிக்க முடியும். பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் 9.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது.
ப்படுவதால் நல்ல லாபம் தரக்கூடியது. பொன்மகள் சேமிப்பு திட்டத்தைப் போலவே இந்த திட்டத்திலும் வட்டி விகிதம் அடிக்கடி மாற்றப்படுகிறது. பொன்மகன் வைப்பு நிதி திட்டம் அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் ஒரு திட்டமாகும். உங்கள் மகனுக்கு 15 வயது ஆகும் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். அதன் பிறகு 18 வயதாகும் போது பணத்தை எடுக்க முடியும் அல்லது ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் உதிர்வு தொகையோடு சேமிப்பை எடுக்காமல் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பு இதில் உள்ளது. கணக்கை தொடங்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இதில் பகுதி அளவு பணத்தை எடுத்துக் கொள்ள முடியும்.

மேலும் கணக்கு தொடங்கி மூன்று ஆண்டுகள் முடிவடைந்த பிறகு இதனை காட்டி கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரு அஞ்சல் அலுவலகத்தில் இருக்கும் பொன்மகன் பொது வைப்பு நிதி சேமிப்பு திட்டத்தை மற்றொரு அஞ்சலக அலுவலகத்திற்கும் மாற்றலாம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆண் குழந்தையின் பெயரில் இந்த கணக்கை தொடங்கலாம். அந்த ஆண் குழந்தை அரசின் எந்த நிதி உதவியும் பெறாதவராக இருக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு குழந்தையின் பெயரில் மட்டுமே கணக்கு தொடங்க முடியும். மஞ்சள் அலுவலகத்தில் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்தில் இணைந்து நீங்களும் பயன்பெறலாம்.
