அடுத்த பட இயக்குனரை பிக் செய்த விஸ்.. லேடி சூப்பர் ஸ்டாரிடம் சிக்கி தவிக்க தயாரான பெருமாள் வாத்தியார்..!

By Nanthini on மார்கழி 24, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர்,  நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர் விஜய் சேதுபதி. பின்னணியில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, 96, கருப்பன், விக்ரம் வேதா போன்ற தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மிகக் குறுகிய காலத்தில் அதிகப்படியான படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் விஜய் சேதுபதி.

அந்த முன்னணி நடிகருடன் நான் நடிக்கவில்லை.. வெளிப்படையாக கூறிய விஜய் சேதுபதி

   

மற்ற நடிகர்கள் போல் ஹீரோ சப்ஜெக்ட் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறாமல் வில்லன் தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் கேமியோ தோற்றத்திலும் என பல படங்களில் நடித்து தனித்துவமான புகழை பெற்றவர் விஜய் சேதுபதி. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

   

Vijay Sethupathi joins hands with director Hari | இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி

 

இந்த படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் விஜய் சேதுபதி அசர வைத்துள்ளார். அதேசமயம் விஜய் சேதுபதி தற்போது தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் விரைவில் முடிவுக்கு வர உள்ள நிலையில் இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி சினிமாவில் பிஸியாக நடிக்க உள்ளார். அடுத்ததாக ட்ரெயின், ஏஸ், காந்தி டாக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாராவுக்காக ஓக்கே சொன்ன விஜய் சேதுபதி... பக்கா ப்ளான் போடும் விக்கி... அடுத்து ஷூட்டிங் தான்! | Vijay Sethupathi has committed to Vignesh Shivan's film for Nayanthara ...

இது அவர்களின் காம்பினேஷனில் அவர்களது முதல் படமாக இருக்கும். ஹரி கடைசியாக விஷாலுடன் ரத்தினம் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனால அவர் வெற்றி படத்தை தந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். விஜய் சேதுபதியும் மாஸ் ஹீரோ படத்தில் நடித்த நீண்ட நாட்கள் ஆனதால் இவர்கள் இணையும் படத்திற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்த படத்தை நயன்தாரா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.