தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் ரொக்க படமும் வழங்கப்படுகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பண்டிகையின் போது வேட்டி சேலை வழங்கும் நோக்கத்துடன் மாநிலத்தில் உள்ள நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கத்துடனும் ஒவ்வொரு வருடமும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இதனிடையே இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசுத்தொகை வழங்கவில்லை. ஆனால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதேசமயம் பொங்கல் பரிசாக ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி மாதம் முழுவதும் மக்கள் பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கப்படுவதாகவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
