2026-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரசு அறிவிக்கப்போகும் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி மற்றும் சேலைகள், வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்து முடிக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். இதற்கான உற்பத்திப் பணிகள் முடிவடைந்து, தற்போது அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலவச வேட்டி, சேலை விநியோகத்தைத் தொடர்ந்து, பொங்கல் பரிசுத் தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
