புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் பொங்கல் பரிசு… தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின்போது மக்களுக்காக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் இந்த பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகப்பை அரசை விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை நடத்திய போது புதிய ரேஷன் கார்டுகள் பிரிண்ட் நிலையில் உள்ளதாக கூறினர். தமிழக அரசு பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்னதாக புதிய ரேஷன் கார்டுகள் ஆக்டிவ் நிலையில் இருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தனர்.