பஞ்சுமிட்டாய் விற்க மேலும் ஓராண்டு தடை… மாநிலம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பஞ்சுமிட்டாய்களை ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் புற்றுநோயை உருவாக்கும் ரோடமைன் பி என்ற ரசாயன பொருள் கலக்கப்படுவது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் விற்பனை செய்வதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருந்தது. மற்றும் மாநிலங்களிலும் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இப்படியான நிலையில் பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பஞ்சுமிட்டாய் மற்றும் ரோடமைன் பி கலந்த உணவு பொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைப்பதற்கும் மேலும் ஒரு வருடத்திற்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவை மீறி பஞ்சுமிட்டாய் விற்பனை செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.