தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.22 கோடி பேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 3000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, அன்பு கரும்பு அடங்கிய பகுதி தொகுப்பை அறிவித்துள்ளது. அதனுடன் சேர்த்து இலவச வேஷ்டி செயலையும் வழங்கப்பட உள்ளது. எதற்காக ரேஷன் கடைகளுக்கு அனைத்து பொருள்களும் அனுப்பப்பட்டுள்ளன. உங்கள் பரிசு தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வரக்கூடாது என்பதற்காக எந்த தேதியில் எந்த நேரம் கடைக்கு வந்து வாங்க வேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் வைத்து பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாய் பெற முடியும். பொங்கல் பரிசு தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் வெளியூரில் இருப்பவர்களுக்கு 3000 ரூபாய் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வெளியூரில் இருப்பவர்கள் தாமதமாக வந்தாலும் பொங்கல் பரிசு தொகையை எந்தவித இடையூறும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.
