வந்தது அலெர்ட்..! சென்னையை குறிவைக்கும் புதிய புயல்..? தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது..!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புதிய புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வட அட்சரேகை 6.3°N மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 84.0°E அருகே நிலைபெற்றுள்ளது.

இந்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, நாளை மாலை அல்லது இரவு நேரங்களில், இலங்கையின் பொத்துவில் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு இடையே இப்புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயல் நகர்வு காரணமாக மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.