சென்னை பட்டினப்பாக்கம் பகுதியின் நில வகைப்பாட்டை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அதிரடியாக மாற்றியுள்ளது. இதுவரை குடியிருப்பு அல்லது பிற பயன்பாட்டில் இருந்த நிலப்பரப்பு, தற்போது வணிகப் பயன்பாட்டிற்கு ஏற்ற நிலமாக வகைப்படுத்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளதாக அரசாணை வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்து இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என்று தவெக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், தற்போது திடீரென சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அந்த நிலத்தின் வகைப்பாட்டை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றியிருப்பது, அங்கு அடுத்து என்ன வரப்போகிறது என்ற புதிய சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
