இரவுக்கு ரூ.57,750 கட்டணம்… ஆனா காலை உணவு வெறும் காபியா…? அமெரிக்க ஆடம்பர ஹோட்டலை விமர்சித்த இந்திய தொழிலதிபர்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 6, 2026

Spread the love

இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபரான வினீத் கே, அமெரிக்காவில் உள்ள ஜே.டபிள்யூ மரியட் என்ற சொகுசு ஹோட்டலில் ஒரு இரவுக்கு சுமார் $600 இந்திய மதிப்பில் சுமார் ரூ.57,751 கட்டணம் செலுத்தித் தங்கியுள்ளார். அங்கு வழங்கப்பட்ட காலை உணவின் அளவையும் வகைகளையும் கண்டு ஏமாற்றமடைந்த அவர், அது குறித்த புகைப்படத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் விதவிதமான பிராந்திய உணவுகள், லைவ் கவுண்டர்கள், ஆசிய மற்றும் மேலைநாட்டு உணவு வகைகள், பழங்கள் மற்றும் இனிப்புகள் எனப் பிரம்மாண்ட பஃபே வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், அமெரிக்காவில் இவ்வளவு அதிகக் கட்டணம் வசூலித்தும், வெறும் ஸ்டார்பக்ஸ் காபி மற்றும் சுமாரான சிற்றுண்டிகளை மட்டுமே “பிரீமியம் பிரேக்பாஸ்ட்” என்று வழங்குவதாக அவர் கலாய்த்துள்ளார்.