2026-ல் டெல்லி ஆடும் ஆட்டம்…. அதிமுகவின் ‘மெகா டிமாண்ட்’…. நள்ளிரவில் நடந்த ரகசிய டீல்…. வெளியான க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்….!

By Nanthini on வைகாசி 7, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், எதிர்பாராத திருப்பங்களுடன் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்துள்ளது. தவெக ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக தான் எதிர்க்கட்சியாகச் செயல்படப்போவதாக அறிவித்துவிட்டது. இதனால் ஆட்சியமைப்பதில் நிலவும் சிக்கல்களைப் பயன்படுத்தி, ஆளுநர் மாளிகை மற்றும் டெல்லி மேலிடம் தமிழக அரசியலில் தனது ஆட்டத்தைத் தொடங்கியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர கர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியபோதும், 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதம் இருந்தால் மட்டுமே பதவியேற்பு விழாவை நடத்த முடியும் என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இந்தச் செயல்பாடு தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் டெல்லி பாஜக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சாய்ந்தது 2029 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆளுநர் மூலமாக தவெகவின் பெரும்பான்மையை நிரூபிப்பதில் முட்டுக்கட்டை போடப்படுவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

   

மற்றொருபுறம், அதிமுக எம்எல்ஏ-க்கள் திடீரென புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக தரப்பில் அதிமுகவிடம் ஆதரவு கோரப்பட்டாலும், அதிமுக முன்வைத்த ‘மெகா டிமாண்ட்’ காரணமாக உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது. இதனால் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் மலைபோல நம்பியுள்ளார். எனினும், அதிமுகவை வளைப்பதன் மூலமே தவெக ஆட்சிக்கு முட்டுக்கட்டை போட முடியும் என பாஜக கணக்கு போடுகிறது.

   

தமிழ்நாட்டில் தவெக மற்றும் அதிமுக இடையிலான ஒரு கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே அமித்ஷாவின் விருப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுக வழியாக தமிழக அரசியலில் தனது பிடியை இறுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஒருவேளை தவெகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போகும் பட்சத்தில், அவர்கள் அதிமுகவை நாட வேண்டிய சூழல் உருவாகும். அப்படி ஒரு சூழல் அமைந்தால், அது வரும் காலங்களில் பாஜகவுக்குச் சாதகமான அரசியல் களத்தை உருவாக்கும் என்பதே டெல்லியின் வியூகமாகப் பார்க்கப்படுகிறது.