NEWS
LIC ஜீவன் சாந்தி… வாழ்நாள் முழுவதும் ரூ.9,560 பென்ஷன்.. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!!
இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். எல்ஐசி ஜீவன் சாந்தி வருடாந்திர ஓய்வூதியத் திட்டமாகும்.
எளிமையான மொழியில், இந்தத் திட்டத்தில் ஒருமுறை பணத்தை முதலீடு செய்து வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேர்ந்து பயனடையலாம். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் தேவையில்லை. எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் ஒருமுறை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ரூ.9,560 ஓய்வூதியமாகப் பெறலாம்.
ரூ.1.5 லட்சம் என்ற அளவில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திரம் உங்களுக்கு ஏற்ற விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஓய்வூதியத்தை பெறலாம். பாலிசிதாரர் உயிரிழந்தாலும் செலுத்தப்பட்ட தொகை நாமினிக்கு கிடைக்கும். இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://licindia.in/hi/jeevan-shanti என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.